உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விடுமுறைக்கு பின் பள்ளி திறப்பு; ஆர்வமுடன் வந்த மணவர்கள்

விடுமுறைக்கு பின் பள்ளி திறப்பு; ஆர்வமுடன் வந்த மணவர்கள்

திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியத்தில் திருப்போரூர், கேளம்பாக்கம், மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன.கோடை விடுமுறை முடிந்து, நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.முதல் நாள் என்பதால், அனைத்து மாணவ - மாணவியரும் தனியாகவும், பெற்றோர்களுடனும் பள்ளிக்கு ஆர்வமுடன்வந்தனர்.கேளம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், ஊராட்சி தலைவர் ராணி ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்துவரவேற்றனர். மேலும், பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும்வழங்கினர்.கொளத்துார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், திருப் போரூர் வி.சி., - எம்.எல்.ஏ.,பாலாஜி பங்கேற்று,மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களைவழங்கினார்.திருப்போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கணேசன் மாணவியருக்கு பாட புத்தகங்களைவழங்கினார். அதேபோல், பள்ளிகளில், இக்கல்விஆண்டுக்கான வழிமுறைகள், நன்னடத்தை விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை