உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோவிலில் சிறுமிக்கு தொல்லை அர்ச்சகர் போக்சோவில் கைது

கோவிலில் சிறுமிக்கு தொல்லை அர்ச்சகர் போக்சோவில் கைது

சென்னை:பெற்றோருடன் கோவிலுக்கு சென்ற சிறுமிக்கு ஆபாச சைகை காட்டி, பாலியல் சீண்டல் செய்த அர்ச்சகரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.திருமங்கலம் மகளிர் காவல் எல்லையில் வசிக்கும், 12 வயது சிறுமி, தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்.சிறுமி தன் பெற்றோருடன், கடந்த 14ம் தேதி கோவிலுக்குச் சென்றார். அப்போது, கோவிலில்அர்ச்சகராக பணிபுரியும் நபர், ஆபாச சைகை காட்டி சிறுமியை அழைத்துள்ளார். பின், பிரசாதம்வழங்கும் போது, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.வீட்டிற்கு வந்த சிறுமி, இதுகுறித்து தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள், திருமங்கலம்மகளிர் போலீசில் புகார் அளித்தனர். சம்பந்தப்பட்ட கோவில் அர்ச்சகரானசரவணன், 30, என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, சிறுமியிடம்பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது.இதையடுத்து, அவரை கைது செய்த திருமங் கலம் மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துவிசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை