உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நன்னடத்தை அலுவலர் பணி வாய்ப்பு

நன்னடத்தை அலுவலர் பணி வாய்ப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு, சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு, சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடம், ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு, எல்.எல்.பி., சட்டம் படித்தோர் விண்ணப்பிக்கலாம். 42 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் நகல்களுடன், வரும் 22ம் தேதி மாலை 5:45 மணிக்குள், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலவருக்கு, அனுப்பி வைக்க வேண்டும்.விண்ணப்பங்களை, http://chengalpattu.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி