உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நந்திவரம் ஜி.எஸ்.டி.,யில் ஆக்கிரமிப்பு அகற்றம்

நந்திவரம் ஜி.எஸ்.டி.,யில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டதில் இருந்து, பல்லாவரம் - செங்கல்பட்டு வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையில் அனைத்து நாட்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுதொடர்பாக, வாகன ஓட்டிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், ஜி.எஸ்.டி., சாலையோரம் உள்ள நடைபாதை கடைகளை அகற்றி, அணுகு சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.இதை தொடர்ந்து, நந்திவரம் ஜி.எஸ்.டி., சாலை மற்றும் அணுகு சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், நேற்று முன்தினம் அகற்றப்பட்டன. நேற்று, நந்திவரம் அரசு மருத்துவமனை முன், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து நடைபாதை கடைகளும், நெடுஞ்சாலைத் துறையினர், போக்குவரத்து போலீசார், வருவாய்த் துறையினர் முன்னிலையில் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை