உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இ.சி.ஆர்., சாலை விரிவாக்கத்திற்கு புயல் பாதுகாப்பு மையம் அகற்றம்

இ.சி.ஆர்., சாலை விரிவாக்கத்திற்கு புயல் பாதுகாப்பு மையம் அகற்றம்

செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்காடு கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலை அருகே புயல் பாதுகாப்பு மையம் இருந்தது.மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில், பாதிக்கப்படும் மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பாக இங்கு தங்க வைக்கப்படுவர்.கடந்த ஆண்டுகளில் வந்த மாண்டஸ் மற்றும்மிக்ஜாம் புயலால்பாதிக்கப்பட்ட, 30க்கும் மேற்பட்டோர் இங்கு தங்க வைக்கப்பட்டனர்.மாமல்லபுரம்- - புதுச்சேரி இடையிலானகிழக்கு கடற்கரை சாலையை, நான்குவழியாக விரிவாக்கம்செய்யும் பணிகள் நடந்து வரும் நிலையில், சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்த கோட்டைக்காடு புயல் பாதுகாப்பு மையம், பொக்லைன் இயந்திரம்வாயிலாக இடித்துஅகற்றப்பட்டது.ஆகையால், இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க, புதிய பாதுகாப்பு மையம் ஏற்படுத்தவேண்டும் என, சமூகஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை