உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிவன் கோவில் குளம் சீரமைக்க கோரிக்கை

சிவன் கோவில் குளம் சீரமைக்க கோரிக்கை

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடமலைப்புத்துார் ஊராட்சியில், பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. கோவில் குளத்தை சுற்றி முட்புதர் வளர்ந்து, பாசி படர்ந்து, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. கோவில் குளத்தில் உள்ள நீரில் காலியான பிளாஸ்டிக் பாட்டில்கள், மதுபாட்டில்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய கோவில் குளம், தற்போது பயன்பாடின்றி உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இப்பகுதியின் நீராதாரத்தை காக்கும் பொருட்டு, குளத்தில் உள்ள கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். மேலும், குளக்கரையை சுற்றி நிழல் தரும் மரங்கள் அமைத்து, நடைபாதை பூங்கா அமைத்து தர வேண்டும்.எனவே, குளக்கரையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை