மாமல்லபுரம், : மாமல்லபுரத்தில் பிரசித்திபெற்றது, ஸ்தலசயன பெருமாள் கோவில். வைணவ 108 திவ்ய தேசங்களில், 63வது கோவில். ஆந்திரா உள்ளிட்ட பகுதி பக்தர்கள், இங்கு வழிபடுகின்றனர். மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதி பக்தர்கள், திருப்பதி சென்று வெங்கடேச பெருமாள் கோவிலில் வழிபடுகின்றனர்.மாமல்லபுரத்திலிருந்து திருப்பதிக்கு நேரடியாக செல்ல, 20 ஆண்டுகளுக்கு முன், மாமல்லபுரம் - திருப்பதி இடையே, தடம் எண் 212எச் அரசு பேருந்து இயக்கப்பட்டது.இப்பேருந்து சேவை, பக்தர்கள், பயணியர்ஆகியோருக்கு பயன்பட்டது. பின், மாமல்லபுரத்திலிருந்து நேரடி பேருந்து இயக்குவது நிறுத்தப்பட்டது. அதனால், இப்பகுதி பக்தர்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என, மாறி மாறி திருப்பதி செல்லசிரமப்படுகின்றனர்.காஞ்சிபுரம், வந்தவாசி ஆகிய பகுதிகளிலிருந்து மாமல்லபுரத்திற்கு, முன் இயக்கப்பட்ட பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. மாமல்லபுரத்தின் ஆன்மிகம், சுற்றுலா முக்கியத்துவம் கருதி, திருப்பதி, காஞ்சிபுரம் ஆகிய வழித்தடங்களில், மீண்டும்நேரடி பேருந்து சேவையை, துவக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.