உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சமுதாய நலக்கூடம் அமைத்து தர கோரிக்கை

சமுதாய நலக்கூடம் அமைத்து தர கோரிக்கை

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியம், வில்வராயநல்லுார் ஊராட்சி பகுதியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதி, விவசாயம் மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதிவாசிகள், தங்களின் இல்ல சுபநிகழ்ச்சிகளை, மதுராந்தகம், சித்தாமூர், மேல்மருவத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்தி வருகின்றனர்.இதனால், தேவையற்ற அலைச்சலும், அதிக அளவில்லான பொருளாதார செலவும் ஏற்படுகிறது.எனவே, இப்பகுதியில் புதிதாக சமுதாய நலக்கூடக் கட்டடம் கட்டித்தர, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை