உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்லுாரி மாணவர்களை தாக்கி கூகுள்பேயில் ரூ.10,000 பறிப்பு

கல்லுாரி மாணவர்களை தாக்கி கூகுள்பேயில் ரூ.10,000 பறிப்பு

திருப்போரூர்:தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் பல்கலையில் படிக்கும் லட்சுமணன், 19,உட்பட மூன்று மாணவர்கள், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, கோவளம் கடற்கரைக்கு சென்றனர்.அப்போது, ஸ்கூட்டி பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள், மேற்கண்ட மூன்று மாணவர்களையும் மடக்கி தாக்கினர். அவர்களிடமிருந்து, மொபைல் போனை பறிக்க முயன்ற போது, லட்சுமணன் தர மறுத்துள்ளார்.அப்போது, அவரை தலையில் கத்தியால் வெட்டி, அவர்களிடமிருந்த மூன்று மொபைல் போன்களை பறித்துக்கொண்டனர்.மேலும், ஒரு மாணவனின் கூகுள் பே கணக்கில் இருந்து, வேறொரு கணக்கிற்கு 10,000 ரூபாய் பணத்தை அனுப்பினர். பின், அங்கிருந்து மூவரும் தப்பினர்.தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, தாக்குதலுக்கு உள்ளான மூன்று மாணவர்களையும் மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.பின், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை