உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலாற்றில் மணல் கடத்திய லோடு ஆட்டோ பறிமுதல்

பாலாற்றில் மணல் கடத்திய லோடு ஆட்டோ பறிமுதல்

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே தண்டரை பகுதியில் உள்ள பாலாற்றில், இரவு நேரத்தில் மணல் திருடப்படுவதாக, அணைக்கட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் இரவு, தண்டரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை மடக்கி, சோதனை செய்ய முயற்சி செய்தபோது, லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு, அதன் ஓட்டுனர் தப்பியோடினார்.இதையடுத்து, லோடு ஆட்டோவை சோதனை செய்த அணைக்கட்டு போலீசார், பாலாற்றில் இருந்து மணல் திருடிக்கொண்டு வந்தது உறுதியானது.பின், லோடு ஆட்டோவை மணலுடன் பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிந்து தப்பியோடிய மர்ம நபரைதேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்