உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை - பெங்களூரு, திருப்பதி நேரடி ரயில் இயக்க எதிர்பார்ப்பு

செங்கை - பெங்களூரு, திருப்பதி நேரடி ரயில் இயக்க எதிர்பார்ப்பு

தமிழக தலைநகர் சென்னை அருகில் செங்கல்பட்டு அமைந்து, மாவட்ட தலைநகராகவும் உள்ளது. மதுராந்தகம், மறைமலை நகர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி ஆகிய நகர்ப் பகுதிகள் உள்ளன. அதுமட்டுமின்றி, சுற்றுலா, ஆன்மிகத்திற்கு புகழ்பெற்ற பகுதி மாமல்லபுரம், அணுசக்தி தொழிற்பகுதியான கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருவிடந்தை, திருப்போரூர் ஆகியமுக்கிய இடங்கள்மாவட்டத்தில் உள்ளன.இப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள், வேலுார், ஆம்பூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, ஓசூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு, முக்கிய தேவைகளுக்கு சென்று திரும்புகின்றனர். பிற பகுதிகளிலிருந்தும், இங்கு பயணியர் வந்து செல்கின்றனர்.மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்து மைய பகுதி செங்கல்பட்டு சென்று, மேற்குறிப்பிட்ட பகுதிகள் செல்லும் அவர்களுக்கு, செங்கல்பட்டிலிருந்து பெங்களூருவிற்கு நேரடி அரசுப் பேருந்து இல்லை.காஞ்சிபுரம், வேலுார் என, பல பேருந்துகள் மாறி மாறி சென்று, கடும் அவதிக்குள்ளாகின்றனர். ரயிலில் செல்ல வேண்டும்எனில், 55 கி.மீ.,தொலைவில் உள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல வேண்டும்.அங்கு செல்ல, கூடுதல் கட்டணம், தூரம், போக்குவரத்து நெரிசல், நேர விரயம் ஆகியவை ஏற்படுகின்றன.இதேபோல், ஆந்திர மாநிலம் திருப்பதிக்கும், செங்கல்பட்டிலிருந்து தினசரி நேரடி ரயில் இல்லை.இப்பகுதியினரின் போக்குவரத்து அவசியம் கருதி, செங்கல்பட்டிலிருந்து பெங்களூரு, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு, தினசரி ரயில் போக்குவத்து துவக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி