உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் புதுப்பிக்க சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் புதுப்பிக்க சிறப்பு முகாம்

செங்கல்பட்டு : மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்க, வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை, சிறப்பு முகாம் நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து கழகம் இணைந்து, 2024- - 25ம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண அட்டை வழங்கி வருகிறது.ஜூலை 1ம் தேதி முதல் 31 மார்ச் 2025 வரை, ஒன்பது மாதத்திற்கு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கான இந்த இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்க, சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், வரும் 26ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல் மாலை 3:00 வரை நடக்கிறது.இம்முகாமில், உரிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ