உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேங்கைவாசலில் 3 ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்தத்தால் அவதி

வேங்கைவாசலில் 3 ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்தத்தால் அவதி

சேலையூர்: சேலையூர் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில், மேகலா நகர், ஆனந்த் அவென்யூ பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதிகளில், குறைந்த மின் அழுத்த பிரச்னை இருப்பதால், வீடுகளில் மின் உபகரணங்களை இயக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.அப்பகுதியினர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், கோடை துவங்கியதும், குறைந்த மின் அழுத்த பிரச்னை துவங்கிவிடும். வீடுகளில் மின் விசிறி வேகமாக ஓடாது. மோட்டார், மிக்சி மற்றும் 'ஏசி'யும் இயங்காது.புகார் தெரிவித்தால், அப்பகுதிக்கு வரும் மின்வாரிய அதிகாரிகள், சரிசெய்வதாக கூறி செல்வரே தவிர, சரிசெய்ய மாட்டார்கள். அதற்குள் கோடை காலம் முடிந்து விடும்.இப்படியே மூன்று ஆண்டுகளாக, இப்பகுதியில் குறைந்த மின் அழுத்த பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறோம்.தற்போதும், குறைந்த மின் அழுத்தம் தொடர்பாக பல முறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை.மின் வாரிய உயர் அதிகாரிகள் தலையிட்டு, குறைந்த மின் அழுத்த பிரச்னையை நிரந்தரமாக சரிசெய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை