உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு பேருந்து மோதி வாலிபர் பலி

அரசு பேருந்து மோதி வாலிபர் பலி

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கோவளம், கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவீந்திரன், 33. இவர், நேற்று மதியம் 2:00 மணிக்கு, ஜூப்பிடர்ஸ்கூட்டரில், கோவளத்திலிருந்து கேளம்பாக்கம் நோக்கி சென்றார்.அப்போது, கேளம்பாக்கத்திலிருந்து கோவளம்நோக்கி வந்த அரசு பேருந்து, ஸ்கூட்டர் மீதுமோதியது. இந்த விபத்தில், ரவீந்திரன் சம்பவஇடத்திலேயே பலியானார்.தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ரவீந்திரனின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்