உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெரியப்பாவை கொன்ற மகன் சரணடைய சென்றபோது கைது

பெரியப்பாவை கொன்ற மகன் சரணடைய சென்றபோது கைது

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, தர்காஸ் பகுதியில் வசித்தவர் உத்திராடம், 56. இவர், நங்கநல்லுார் பகுதி மின் வாரிய அலுவலகத்தில் கேங்மேன்.இவருக்கும், இவரது தம்பி சங்கருக்கும் குடும்ப சொத்துக்களை பாகம் பிரிப்பதில் பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில், தர்காஸ் பகுதியில் உள்ள ஏரிக்கு, இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக உத்திராடம் சென்றுள்ளார்.அப்போது, அங்கு மறைந்திருந்த அவரது தம்பி சங்கரின் மகன் சுபாஷ், 22, பெரியப்பாவான உத்திராடத்தை கத்தியால் குத்தி படுகொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பினார்.புகாரின் பேரில், கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து சுபாஷை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று வக்கீலுடன் செங்கல்பட்டு நீதிமன்றம் சென்ற சுபாஷ், அங்கு நீதிபதி முன்னிலையில் சரணடைய முயன்றுள்ளார்.அப்போது, அவரை விசாரித்த நீதிபதி, சுபாஷை கூடுவாஞ்சேரி போலீசாரிடம் ஒப்படைக்க, அவரது வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டார்.பின், செங்கல்பட்டு நீதிமன்றம் வந்த கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், சுபாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை