உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த மூவர் கைது

கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த மூவர் கைது

சென்னை : கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த வழக்கில், மூவரை போலீசார் கைது செய்தனர்.வடபழனி, ஒட்டகப்பாளையம், முதல் தெருவைச் சேர்ந்தவர் ராகுல், 21. இவர், கடந்த 5ம் தேதியன்று, 'பைக்'கில் அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது, அங்கு அவரை வழிமறித்த மூன்று பேர், கத்தியைக் காட்டி மிரட்டி, 500 ரூபாயை பறித்துச் சென்றனர்.புகாரின்படி, சூளைமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.நேற்று இந்த வழக்கில், மேற்கு முகப்பேரைச் சேர்ந்த கிஷோர்குமார், 24, அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஷாம்,21, சந்தோஷ் குமார்,24, ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து கத்தி ஒன்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


 பட்டம்

15 hour(s) ago  




அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை