உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டிப்ஸ் கேட்டு நச்சரிக்கும் படகு ஓட்டுனர்கள் முட்டுக்காடில் சுற்றுலா பயணியர் வேதனை

டிப்ஸ் கேட்டு நச்சரிக்கும் படகு ஓட்டுனர்கள் முட்டுக்காடில் சுற்றுலா பயணியர் வேதனை

திருப்போரூர்:திருப்போரூர் அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு படகு குழாம் உள்ளது. இது, 1984ல் துவங்கப்பட்டு, மாநில சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த படகு குழாமில், மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. உணவகம், குடிநீர் வசதி, கழிப்பறை, வாகன நிறுத்துமிடமும் உள்ளன.சுற்றுலா பயணியர் வசதிக்காக, இங்கு 5 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு அடுக்கு மிதவை உணவக கப்பல் தயாரிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது.விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஏராளமான சுற்றுலா பயணியர் இங்கு படகு சவாரி செல்கின்றனர்.ஆனால், இங்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக, சுற்றுலா பயணியர் புகார் தெரிவிக்கின்றனர். உணவகம் அருகே, தடுப்பு வேலியின் ஒரு பகுதி உடைந்து, திறந்தவெளியாக உள்ளது.பெரியவர்கள், குழந்தைகள் அமரும் இந்த பகுதியில், தண்ணீரில் தவறி விழும் சூழல் நிலவுகிறது. உடனடியாக, தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.அதேபோல், படகு சவாரி செய்வதற்கு, இருக்கைக்கு ஏற்றவாறும், இயந்திர படகுக்கு ஏற்றவாறும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆனால், நுழைவு கட்டணம் என்ற பெயரில், ஒவ்வொரு நபருக்கும், தலா 10 ரூபாய் தனியாக வசூலிக்கின்றனர். இந்த நுழைவு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என, பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.அதேபோல், படகு சவாரி செல்லும் பயணியரிடம், படகு ஓட்டுனர்கள், 100 முதல் 200 ரூபாய் வரை, 'டிப்ஸ்' கேட்டு நச்சரிப்பதாக பயணியர் புகார் கூறுகின்றனர்.இதுபோன்ற சேவை குறைபாடுகளால், சுற்றுலா பயணியர் மீண்டும் முட்டுக்காடு வருவதற்கு யோசிப்பதாகவும், சுற்றுலா துறை அதிகாரிகள், பயணியரின் குற்றச்சாட்டுகள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சுற்றுலா பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sk
மே 30, 2024 12:13

last week naanum family oda boat savari ponom, motor boat ku 1050rs, boat driver yenna solli tips kekkuraru na, avangaluku salary illaiyam, 1050 rs pay panna boat ku, adhula avangaluku 50 rs than commission base la work pannurangalam. yedhavdhu paathu pannunga pannunga nu solli varum podhu torture pannuranga.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை