உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வெளிமாநில மதுபாட்டில் பதுக்கிய இருவர் கைது

வெளிமாநில மதுபாட்டில் பதுக்கிய இருவர் கைது

சென்னை அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம், இ.சி.ஆர்., திருவான்மியூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது, இரண்டு பேர் வந்த ஒரு வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது, அதில், டில்லி, ஹரியானா, புதுச்சேரி மாநில மது வகைகள் இருந்தன.இரண்டு பேரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், ராயபுரம் கிடங்கில், இதர மாநில மது வகைகள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.ராயபுரத்தை சேர்ந்த கலைவாணன், 35, சுனில், 32, ஆகியோரை கைது செய்த போலீசார், 1,200 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை