உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பள்ளி அளவில் வாலிபால் செயின்ட் பீட்ஸ் வெற்றி

பள்ளி அளவில் வாலிபால் செயின்ட் பீட்ஸ் வெற்றி

சென்னை : நங்கநல்லுாரியில் துவங்கிய, பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில், 29 பள்ளிகள் பங்கேற்றன.இந்து காலனி, செல்லம்மாள் வித்யாலயா பள்ளி சார்பில், 30வது செல்லம்மாள் ரோலிங் கோப்பைக்கான வாலிபால் போட்டி, நங்கநல்லுாரில் உள்ள பள்ளி வளாகத்தில் நேற்று துவங்கியது.சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 29 பள்ளி மாணவர் அணிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடக்கின்றன.முதல் போட்டியில், மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் அணி, 30 - 24 என்ற கணக்கில் வேலம்மாள் பள்ளியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியிலும், செயின்ட் பீட்ஸ், 30 - 13 என்ற கணக்கில் ராயபுரம் செயின்ட் பீட்டர் பள்ளியை வீழ்த்தியது.ராயபுரம் பி.ஏ.கே., அணி 30 - 13 என்ற கணக்கில் அடையாறு பாலவித்யா மந்திர் பள்ளியையும், செயின்ட் பீட்டர்ஸ் அணி, 30 - 24 என்ற கணக்கில் நல்லிக்குப்பம் அரசு பள்ளியையும் தோற்கடித்தன. போட்டிகள் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்