உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிதாக வாங்கிய கழிவுநீர் வாகனம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

புதிதாக வாங்கிய கழிவுநீர் வாகனம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

மதுராந்தகம் : மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், நகராட்சியில் உள்ள தனி குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என, 10,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இதுவரை, தனியார் கழிவுநீர் வாகனம் வாயிலாக, வீடுகளில் இருந்து கழிவுநீர் எடுக்கப்பட்டு, கருங்குழி பேரூராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.தற்போது, மதுராந்தகம் நகராட்சியில் கழிவுநீர் எடுத்துச் செல்ல, நகராட்சியின் சார்பாக, 43.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக கழிவுநீர் வாகனம் வாங்கப்பட்டுள்ளது.இதனால், நகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து பெறப்படும் கழிவு நீரை, முறையாக அப்புறப்படுத்த முடியும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்த்தனர்.ஆனால், வாங்கி ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், புதிய கழிவுநீர் வாகனம் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப் படவில்லை. எனவே, கழிவுநீர் அகற்றும் வாகனத்தை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.இதுகுறித்து, மதுராந்தகம் நகராட்சி பொறியாளர் கூறியதாவது:மதுராந்தகம் நகராட்சியில், ஒரு வாரத்திற்கு முன், புதிதாக கழிவு நீர் அகற்றும் வாகனம் வாங்கப்பட்டது. அதற்கு இன்னும் ஓட்டுனர் உள்ளிட்ட ஊழியர்கள்நியமிக்கப்படவில்லை.சில தினங்களில், கழிவு நீர் அகற்றும் வாகன ஓட்டுனர் மற்றும் குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் பெறப்படுவதற்கான கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படும். பின், நகராட்சி சுகாதாரப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ