உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சின்னம் பொருத்தும் பணி அடுத்த வாரம் துவக்கம்

சின்னம் பொருத்தும் பணி அடுத்த வாரம் துவக்கம்

திருப்போரூர் : காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., உட்பட 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் சட்டசபை தொகுதியில், 318 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில், 383 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 383 கட்டுப்பாட்டு கருவிகள், 414 வி.வி.பேட் கருவிகள் பாதுகாப்பு அறையில், போலீஸ்பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.மேற்கண்ட ஓட்டுச் சாவடிகளில், போதுமான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.இந்நிலையில், திருப்போரூர் சட்டசபைதொகுதிகளுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், அடுத்த வாரம் சின்னம் பொறிக்கப்பட்ட பேப்பர் பொருத்தும் பணி நடைபெற உள்ளது.இது குறித்து, தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருப்போரூர் சட்டசபை தொகுதியில், தேவையான இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது, நான்கு குழுக்கள் வாயிலாக தபால் ஓட்டுக்கான பணிகள் நடந்து வருகின்றன.இரண்டாம் கட்ட பயிற்சிக்குப்பின், அடுத்த வாரத்தில் மின்னணு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி துவங்கப்படஉள்ளது.இவ்வாறு அவர்கூறினர்.w


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை