உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.2 கோடி கடன் தருவதாக 16 லட்சம் மோசடி

ரூ.2 கோடி கடன் தருவதாக 16 லட்சம் மோசடி

மாம்பலம்:தி.நகர், கோபால கிருஷ்ணா சாலையைச் சேர்ந்தவர் வினோத், 39. இவர், தரமணியில் நான்கு பேருடன் சேர்ந்து மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவருக்கு அறிமுகமான கோவூரைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் வாயிலாக, மகேஷ் சுப்ரமணியம் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. வினோத்திற்கு புது தொழில் துவங்க, தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து, 2 கோடி ரூபாய் பெற்றுத் தருவதாக மகேஷ் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.அத்துடன், அதற்கான செலவு மற்றும் 'கமிஷன்' தொகையாக 16 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அவரை நம்பி, கடந்தாண்டு அக்டோபர், தி.நகர் வி.என்., சாலையில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் வைத்து, 16 லட்சம் ரூபாயை மகேஷ் சுப்ரமணியத்திடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.ஆனால், லோன் பெற்றுத் தராமல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்ட போது, மகேஷ் சுப்ரமணியம், வினோத்தை மிரட்டியுள்ளார்.இது குறித்து மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை