உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  தாம்பரம் தொகுதியில் 25,000 போலி ஓட்டுகள்

 தாம்பரம் தொகுதியில் 25,000 போலி ஓட்டுகள்

தாம்பரம்: தாம்பரம் சட்டசபை தொகுதியில், 25,000 போலி ஓட்டுகள் உள்ளதாக, அ.தி.மு.க.,வினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். தாம்பரம் சட்டசபை தொகுதி, சேலையூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது: தாம்பரம் சட்டசபை தொகுதியில், 25,000 ஓட்டுகள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளன. 115வது பாகத்தில், ஒரே வீட்டில், 350 ஓட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 117வது பாகத்தில், ஒரே வீட்டில், 150 ஓட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. பாகம் 170, ரயில்வே குடியிருப்பு பகுதி, ரயில்வே துறையால் இடிக்கப்பட்டு விட்டது. அந்த குடியிருப்புகளின் பெயரில், பல்வேறு ஓட்டுகள் போலியான உள்ளன. இந்த சிறப்பு திருத்தம் மூலம், போலி ஓட்டுக்களை நீக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. போலி ஓட்டுகள் மூலம் வெற்றி பெறுவது தான், தி.மு.க.,வின் செயல்பாடாக இருந்துள்ளது. தற்போது, போலி ஓட்டுகளை நீக்கும் போது, அவர்கள் கொதிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை