| ADDED : பிப் 04, 2024 02:18 AM
காஞ்சிபுரம்:தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி, புதுடில்லி, காசியாபாத் பகுதியில், கடந்த இரு நாட்களாக நடந்தது.இதில் 15 மாநிலங்களைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். 12 - 16 வயது, 20 வயதிற்கு மேற்பட்டோர், பெண்கள் பிரிவு உட்பட ஏழு பிரிவுகளில் 14 வகையான போட்டிகள் நடந்தன.தமிழகம் சார்பில், 45 வீராங்கனையர் பங்கேற்றனர். இதில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, காஞ்சி ஏர் ரைபிள் அகாடமி சார்பில் நான்கு வீரர்கள் பங்கேற்றனர்.வயது 14க்கு உட்பட்டோர் பிரிவில் சஞ்சய், 21 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் சுரேஷ், பெண்கள் பிரிவில் ஷோபனா என மூவரும், தங்கப்பதக்கம் பெற்றனர். அதேபோல் 20 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் டாக்டர் செந்தில்குமார், வெள்ளி பதக்கம் வென்றார்.பதக்கம் வென்ற வீரர்களுக்கு, பயிற்சியாளர் பாபு, அகாடமியில் பயிலும் பிற வீரர், வீராங்கனையர் வாழ்த்து தெரிவித்தனர்.