மேலும் செய்திகள்
திருப்போரூர் ஒன்றியத்தில் 12 ஏரிகள் நிரம்பின
26-Oct-2025
சாலையில் திரியும் மாடுகளால் தினமும் தொல்லை
26-Oct-2025
செங்கல்பட்டு: இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள 'அக்னிவீர் வாயு' போட்டித்தேர்வுகளுக்கு, செங்கல்பட்டு மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து, கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:இந்திய ராணுவத்தால், அக்னிவீர் வாயு தேர்வுகள், இணைய வழியில் வரும் மார்ச் 17ம் தேதி முதல் நடைபெற உள்ளது.இத்தேர்வில் பங்கேற்க, கடந்த 17ம் தேதி முதல், https://agnipathvayu.cdac.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.இணையவழி தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், இத்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரித்தாள்கள் அக்னிபாத்வாயு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.அக்னிவீர்வாயு பணிக்கு, ஆண் மற்றும் பெண் திருமணம் ஆகாதவராகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்துடன் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.மூன்று வருட அங்கீகரிக்கப்பட்ட டிப்ளமோ தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் பங்கேற்கலாம்.செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும், விருப்பமும் உள்ள மாணவர்கள், அக்னிவீர் வாயு போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்து, ஆன்லைன் தேர்வில் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
26-Oct-2025
26-Oct-2025