உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மறைமலை நகர் காவல் நிலையத்தில் ஓய்வறை இன்றி காவலர்கள் அவதி

மறைமலை நகர் காவல் நிலையத்தில் ஓய்வறை இன்றி காவலர்கள் அவதி

மறைமலை நகர்:மறைமலை நகர், பெரியார் சாலை சிப்காட் செல்லும் பகுதியில், மறைமலை நகர் காவல் நிலையம் இயங்கி வருகிறது.இந்த காவல் நிலையத்தில், சட்டம்- - ஒழுங்கு, குற்றப்பிரிவுக்கு என, அதிகாரிகள் உட்பட, 80க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர்.இங்கு, இரவு பணி முடிந்து போலீசார் ஓய்வு எடுக்க போதிய இடவசதி இல்லாமல், அவதியடைந்து வருகின்றனர். உடை மாற்றவோ, உணவு உண்ணவோ முறையாக இடவசதி இல்லாமல் உள்ளனர்.மேலும், போதிய அளவு கழிப்பறை மற்றும் குளியலறை இல்லாததால், முதல்வர், கவர்னர் ஆகியோரின் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போது, குளிக்கக்கூட இடமின்றி தவிக்கின்றனர்.சில மாதங்களுக்கு முன், போலீசார் ஓய்வு எடுக்க, இரும்பு தகடுகள் கொண்டு அமைக்கப்பட்ட அறை, தற்போது வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை வைக்கும் குடோனாக செயல்பட்டு வருகிறது.தொடர் பணியில் இருக்கும் போலீசாருக்கு ஓய்வு எடுக்கக்கூட முறையாக இடவசதி இல்லாததால், போலீசார் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.எனவே, போலீசாருக்காக அமைக்கப்பட்ட அறையில், மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி, அவர்களுக்கு வழங்க வேண்டும். கூடுதல் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ