உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏரியை துார்வார கோரி மதுராந்தகத்தில் ஆர்ப்பாட்டம்

ஏரியை துார்வார கோரி மதுராந்தகத்தில் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்:மதுராந்தகம் ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 2,500 ஏக்கர். ஐந்து மதகுகள் வழியாக 4,000 ஏக்கர் விவசாய நிலங்களும், மேல்மட்ட கால்வாய் வழியாக 30 ஏரிகளுக்கு நீர் கொண்டு சென்று, அதிலிருந்து 3,000 ஏக்கர் நிலங்கள் என மொத்தம், 7,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.தற்போது, 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏரியை துார்வாரி ஆழப்படுத்துதல், கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் கதவணையுடன் கூடிய உபரி நீர் போக்கி கட்டமைக்கும் பணிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், நேற்று ஏரியில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும், துரிதப்படுத்த கோரியும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த சி.ஐ.டி.யு.,வினர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை