உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சிதிலமடைந்த கழிப்பறை கீழக்கரணையில் அவதி

 சிதிலமடைந்த கழிப்பறை கீழக்கரணையில் அவதி

மறைமலை நகர்: கீழக்கரணை கிராமத்தில், சேதமடைந்துள்ள கழிப்பறையை சீரமைக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மறைமலை நகர் நகராட்சி 17வது வார்டில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, வடமாநிலத்தைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, இங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்காக கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் நகராட்சி சார்பில், காமராஜர் சாலை -- கீழக்கரணை சாலையில், பொது கழிப்பறை அமைக்கப்பட்டது. ஆனால், இந்த கழிப்பறை கட்டடம் முறையான பராமரிப்பின்றி, தண்ணீ ர் குழாய்கள் உடைந்து பாழடைந்து உள்ளது. இதன் காரணமாக, இப்பகுதி மக்கள் இந்த கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஆண்டுக்கணக்கில் பராமரிப்பு இல்லா ததால், கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளன. பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டடம் வீணாகி வருகிறது. எனவே, இந்த கழிப்பறை கட்டடத்தை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை