உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  நெற்பயிருக்கு காப்பீடு அவகாசம் நீட்டிப்பு

 நெற்பயிருக்கு காப்பீடு அவகாசம் நீட்டிப்பு

செங்கல்பட்டு: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், சிறப்பு பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய, வரும் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், சிறப்பு பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி, கடந்த 15ம் தேதியிலிருந்து, வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, காப்பீடு செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு, அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை