உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெருமாட்டுநல்லுாரில் கண் சிகிச்சை முகாம்

பெருமாட்டுநல்லுாரில் கண் சிகிச்சை முகாம்

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று, இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.இந்த முகாமை, நந்திவரம் - கூடுவாஞ்சேரி பிரைட் லயன்ஸ் சங்கம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை இணைந்து நடத்தின.இந்த முகாம், நேற்று காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெற்றது.இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர். முகாமில் பங்கேற்ற அனைவருக்கும், கண் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை