மேலும் செய்திகள்
ஆம்னி பஸ் மோதி வாலிபர் பலி
31 minutes ago
மூதாட்டி உடல் மீட்பு
32 minutes ago
ரயில் நிலையத்தில் பைக் திருட்டு
34 minutes ago
கார் மோதி வாலிபர் பலி
35 minutes ago
இன்று இனிதாக .... (01.12.2025) செங்கல்பட்டு
36 minutes ago
திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில், 528 ஏரிகளில் வெறும் 66 ஏரிகள் மட்டுமே நிரம்பியதால், 1.30 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏரிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியதே காரணம் என குற்றம் சாட்டியள்ள விவசாயிகள், இனியாவது நீர்நிலைகளை மீட்டெடுக்க, அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.,ல் துவங்கியது. ஆண்டுதோறும் இந்த பருவத்தில் பெய்யும் மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகள் பெருமளவில் நிரம்புவதால் ஏரி பாசனம் மூலம் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்தாண்டும், பருவமழை கைகொடுத்து பெரும்பாலான ஏரிகள் நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்த்த அளவு ஏரிகள் நிரம்பாததால், ஏரி பாசனம் செய்யும் விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருநாட்கள் முன் வங்க கடலில் உருவான 'டிட்வா' புயல் காரணமாக கனமழை பெய்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாவட்டம் முழுதும் சரிவர மழை பெய்யாததால், நீர்நிலைகளுக்கே போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் 528 ஏரிகள் உள்ளன. அதில், நேற்றைய கணக்கெடுப்பின் படி, வெறும் 66 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன. மொத்த ஏரிகளில், 25 சதவீதம் ஏரிகள் கூட முழுமையடையாதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. வரத்து கால்வாய்களின் நிலை ஆக்கிரமிப் பில் உள்ளதும், துார்வாராததும் இதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். நீர்வள ஆதாரத்துறையின், கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகள் மூலமாக 9.9 டி.எம்.சி., தண்ணீர் சேமிக்க முடியும். 1.30 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால் வெறும் 66 ஏரிகள் மட்டுமே நிரம்பி இருப்பதால், ஏ ரிகளில் வெறும் 2 டி.எம்.சி., தண்ணீர் கூட இல்லாதது நவரை பருவத்திற்கு பாசனம் செய்ய சிரமத்தை ஏற்படுத்தும் என, விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். மாவட்டத்தில், 528 ஏரிகளில் பெரும்பாலான ஏரிகள், நிர்வரத்து கால்வாய் மற்றும் போக்கு கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாலேயே ஏரிகள் நிரம்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நீர்வளத்துறையினர் அலட்சியம் காட்டுவதால், பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அப்படியே இருக்கின்றன. இது சம்பந்தமாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்தாலும், போதிய நடவடிக்கை இல்லாததால் கால்வாய் ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. இதனால் பருவ மழையில் நிரம்பவேண்டிய ஏரிகள் நிரம்பாமல் மழைநீர் வீணாகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவு பிறப்பித்த போதும், தமிழக அரசு இது சம்பந்தமாக அரசாணைகள் பிறப்பித்த போதும் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காரணமாக ஏரிகளின் நிலை மோசமாக காணப் படுகின்றன. கால்வாயை சரி செய்ய வேண்டும் பருவ மழையை நம்பி 100 சதவீதம் தண்ணீர் இருக்கும் என விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். அதற்கேற்ற மழை வந்தால் பயனாக இருக்கும், மேட்டு பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். கடந்த ஆட்சியில் பாலாற்றில் தடுப்பனை கட்டப்பட்டது. இதனால், காஞ்சிபுரம் எல்லை முதல் கல்பாக்கம் எல்லை வரை பயனாக உள்ளது. ஏரிகளில் நீர்மட்டத்தை தாண்டி ஆழமாக மண் எடுப்பதால், மதகு வழியாக வெளியேறும் தண்ணீர் மற்ற பள்ளத்தில் தேங்கி விடுகிறது. இதனால் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. நீர்வரத்து கால்வாயை சரி செய்யவேண்டும், பழுதடைந்த மதகு, கலங்கல் பகுதிகளை சரிசெய்ய வேண்டும். - எம்.வெங்கடேசன், செங்கல்பட்டு மாவட்ட விவசாய நலச்சங்க தலைவர்.
31 minutes ago
32 minutes ago
34 minutes ago
35 minutes ago
36 minutes ago