உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  புதுப்பட்டினம் புது சாலையில் ஜல்லி கற்கள் பெயரும் அவலம்

 புதுப்பட்டினம் புது சாலையில் ஜல்லி கற்கள் பெயரும் அவலம்

க ல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியிலிருந்து வசுவசமுத்திரம் வரை, ஊராட்சி ஒன்றிய சாலை உள்ளது. இச்சாலை பகுதியில் உள்ள புதுப்பட்டினம் நகர்களில் வசிப்போர் மற்றும் வசுவசமுத்திரம் ஆகிய பகுதியினர், அனைத்து தேவைகளுக்கும் இச்சாலை வழியாக, புதுப்பட்டினம் பிரதான பகுதி சென்று வருகின்றனர். இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். புதிய சாலை அமைக்க வலியுறுத்திய நிலையில், சமீபத்தில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், சாலையை தரமின்றி அமைத்துள்ளதால், ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது. சம்பந்தப்பட்ட சாலையை அமைத்த ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். - மதுரகவியழகன், கல்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை