உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருமண ஆசை காட்டி காவலாளி அத்துமீறல்

திருமண ஆசை காட்டி காவலாளி அத்துமீறல்

சென்னை:சென்னை, பெரம்பூர் வெற்றி நகரைச் சேர்ந்த பெண்ணின் கணவர் புற்றுநோய் பாதித்து இறந்து விட்டார். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.சமீபத்தில், 24 வயதான இரண்டாவது மகள் திடீரென வாந்தி எடுத்ததால், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவ பரிசோதனையில், மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. புற்றுநோய் பாதித்த தந்தை சிகிச்சையில் இருந்த போது, மருத்துவமனைக்கு அவரது மகள் அடிக்கடி சென்றுள்ளார். அப்போது, மருத்துவமனை காவலாளியான புளியந்தோப்பைச் சேர்ந்த அசேன், 38, பழக்கமாகி உள்ளார்.நான்கு மாதத்திற்கு முன், அப்பெண்ணை, திரு.வி.க., நகரில் உள்ள நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அசேனுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என, அப்பெண்ணின் தாய், செம்பியம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அசேனை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ