உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வி.ஐ.பி.,க்கள் பிரசார செலவு எந்த கணக்கில் சேரும்? கட்சியினருக்கு சந்தேகம்

வி.ஐ.பி.,க்கள் பிரசார செலவு எந்த கணக்கில் சேரும்? கட்சியினருக்கு சந்தேகம்

சென்னை:தென் சென்னைதொகுதியில், தேர்தல் நடத்தை விதிமுறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. இதில், தி,மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.அவர்கள், 'ஒரு வேட்பாளருக்கு, இரண்டு இடத்தில் ஓட்டு இருந்தால் போட்டியிட முடியுமா; வி.ஐ.பி.,க்கள் பிரசாரத்துக்கு வரும்போது, அதன் செலவு யார் கணக்கில் சேர்க்கப்படும்' எனகேட்டனர். மேலும், 'வேட்பாளரின்நேரடி முகவராக கவுன்சிலர், மண்டல குழு தலைவராக இருக்கமுடியுமா; தேர்தல் பணிமனை அலுவலகம், 500 சதுர அடிக்கு அனுமதி பெற்று, சுற்றி காலியிடம் இருந்தால், அதற்கு செலவு கணக்கு எப்படி சேர்க்கப்படும்' என, கேள்வி எழுப்பினர்.இதற்கு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறிய பதில்: வேட்பாளருக்கு, ஓரிடத்தில் தான் ஓட்டு இருக்க வேண்டும். வி.ஐ.பி.,க்கள் பிரசாரத்துக்கு வந்து, பொதுக்கூட்டத்தில் பேசினால், அதன் செலவு வி.ஐ.பி., சார்ந்த கட்சியை சாரும். அதே வேளையில், தொகுதியில் உள்ளபிரசார வாகனத்தில் ஏறி பிரசாரம் செய்தால், அதன் செலவில், 50 சதவீதம் வேட்பாளர் கணக்கிலும், 50 சதவீதம் வி.ஐ.பி.,யின் கட்சி கணக்கிலும்சேர்க்கப்படும்.அனுமதி கேட்கும்போது, குறிப்பிட்டுள்ள இடத்திற்கு தான் பணி மனைக்கான செலவு சேர்க்கப்படும். சுற்றியுள்ள இடத்தை பயன்படுத்தியதாக பறக்கும் படைக்கு தெரிய வந்தால், அந்த இடத்திற்கானசெலவும், வேட்பாளர்கள் கணக்கில் சேர்க்கப்படும்.வேட்பாளரின் நேரடி முகவர் தொடர்பாக கேள்விக்கு, உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று விளக்கம் தரப்படும். இவ்வாறு அவர்கள் பதில் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை