மேலும் செய்திகள்
மதுக்கடையில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
7 hour(s) ago
தெருவில் கிடந்த மோதிரம் போலீசில் ஒப்படைத்த மாணவர்
10 hour(s) ago
பிசியோதெரபி மருத்துவ முகாம்
10 hour(s) ago
கூடுவாஞ்சேரி : நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலை காமராஜபுரத்தில், ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி தொடக்கப்பள்ளியில் நேற்று காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, மாபெரும் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இப்போட்டியை, நியூ வேர்ல்ட் ஜிம் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் எல்.வீரப்பன் சிலம்பாட்ட கழகம் ஆகியவை இணைந்து நடத்தின.இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 380 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சிக்கு, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக், தொழிலதிபர் கலைச்செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினர்.மறைமலை நகர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, செங்கல்பட்டு மாவட்ட சிலம்பாட்ட கழக செயலர் தேவி, செங்கல்பட்டு மாவட்ட சிலம்பாட்ட கழக போட்டி இயக்குனர் செந்தில்குமார், தொழிலதிபர் மதன் ஆகியோர் இணைந்து, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.
7 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago