மேலும் செய்திகள்
ம.தி.மு.க., சார்பில் திருப்போரூரில் அன்னதானம்
06-Nov-2025
மதுராந்தகத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
06-Nov-2025
சென்னை:மவுலிவாக்கத்தில், 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி, முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில், 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம், கடந்த 2014ல் இடிந்து விழுந்தது. இதில், 61 பேர் பலியாகினர்; பலர் படுகாயமடைந்தனர்.இந்த விபத்தைத் தொடர்ந்து, அருகில் இருந்த மற்றொரு 11 மாடி கட்டடமும், சில ஆண்டுகள் கழித்து இடிக்கப்பட்டது.விபத்து குறித்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கும், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் கமிஷனையும் அமைத்து உத்தரவிட்டார்.'உண்மை குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைந்துள்ளது. எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, அப்போதைய தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய,'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, முதல்வர் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்,''கட்டட விபத்து வழக்கில், ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க காரணமும் இல்லை என்பதால், வழக்கை முடித்து வைக்க வேண்டும்,'' என்றார்.இதை பதிவு செய்த 'முதல் பெஞ்ச்' முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
06-Nov-2025
06-Nov-2025