உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பாலுார், சித்தாமூர், அணைக்கட்டில் புது இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

 பாலுார், சித்தாமூர், அணைக்கட்டில் புது இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

சித்தாமூர்: செங்கல்பட்டு மாவட்டம், பாலுார் காவல் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, சில மாதங்களுக்கு முன், எஸ்.ஐ., நிலையில் இருந்த பாலுார் காவல் நிலையம், இன்ஸ்பெக்டர் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டது.

தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் சதீஷ், பாலுார் காவல் நிலையத்தின் புதிய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றார். இதேபோல், சித்தாமூர் காவல் நிலையம் தரம் உயர்த்தப்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், சித்தாமூர் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். Galleryஅணைக்கட்டு காவல் நிலையம் தரம் உயர்த்தப்பட்டு, சென்னை குற்றப்புலனாய்வு துறையில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாண்டியன், அணைக்கட்டில் பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை