உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்

திருப்போரூர் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், நேற்று நடந்தது. அங்கு, மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.இதில், வருவாய், ஊரக வளர்ச்சி, மகளிர் திட்டம், மின்சார வாரியம், காவல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பாக, 13 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு மையத்திலும், துறை சார்ந்த அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு, பொது மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனர்.முகாமில், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், ஒன்றிய துணை தலைவர் சத்யா, பேரூராட்சி தலைவர் தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று, முகாம் நிகழ்வுகளை துவக்கி வைத்தனர்.இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடந்தது. இதில், அப்பகுதிவாசிகள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.அதேபோல், சித்த மருத்துவம் குறித்தும், சித்த மருத்துவத்தில், சவாலான நோய்களையும் குணப் படுத்தும் சிகிச்சைகள் குறித்தும், விளக்கப்படம் காண்பித்து, அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை