உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பிரதமர் கிராமபுற சாலை திட்டம்: அ.தி.மு.க., எம்.பி., வலியுறுத்தல்

 பிரதமர் கிராமபுற சாலை திட்டம்: அ.தி.மு.க., எம்.பி., வலியுறுத்தல்

மாமல்லபுரம்: பிரதமரின் கிராமபுற சாலை திட்டத்தின் கீழ், 1 கி.மீ., சாலையையும் தேர்வு செய்ய, அ.தி.மு.க., எம்.பி., தனபால் வலியுறுத்தி உள்ளார். திட்டத்தின் கீழ், ஊராட்சிப் பகுதிகளில், சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. 3 கி.மீ., தொலைவு உள்ள சாலையை மேம்படுத்துவதற்கே, திட்ட நெறிமுறை உள்ளது. அதற்கும் குறைவான தொலைவு உள்ள பல சாலைகள் சேதமாகி இருப்பின் அதை சீரமைக்க இயலவில்லை. எனவே இத்திட்டத்தின் கீழ், 1 கி.மீ., சாலையையும், சீரமைப்பிற்கு தேர்வு செய்யும் வகையில், நெறிமுறைகளை மாற்ற வேண்டும் என, அ.தி.மு.க., - ராஜ்யசபா எம்.பி., தனபால், வலியுறுத்தி உள்ளார். ஊராட்சிப் பகுதிகளில், ஊராட்சி நிர்வாகம், செடிகள் வளர்ப்பது அவற்றுக்கு பாதுகாப்பு வேலி அமைப்பது, கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்து, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரிப்பது ஆகிய செயல்பாடுகளுக்கு, நிதி ஒதுக்கும் வகையில், தற்போதைய வி.பி.ஜி. - ராம் திட்டத்தில், நெறிமுறைகள் உருவாக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை