உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கருங்குழி ஏரி பூங்கா சீரமைக்க கோரிக்கை

கருங்குழி ஏரி பூங்கா சீரமைக்க கோரிக்கை

மதுராந்தகம்:கருங்குழி பேரூராட்சியில், தமிழ்நாடு பொன்விழா 1969- - 2019- ஆண்டை சிறப்பிக்கும் வகையில், சாலையோர ஏரிக்கரை பூங்கா அமைக்கப்பட்டது.இந்த பூங்கா, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, நிழல் தரும் மரங்கள் நிறைந்து உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நீண்ட துாரம் பயணம் செல்வோர் இளைப்பாறும் இடமாக இருந்து வந்தது.சில மாதங்களாக, உரிய பராமரிப்பு இன்றி, பூங்கா பகுதியில் குப்பை நிறைந்து காணப்படுகிறது. மேலும், மது அருந்துவோரின் கூடாரமாக உள்ளது.ஏரிக்கரை பகுதியில், காலி மது பாட்டில்கள், வாட்டர் கேன்கள், தின்பண்ட கவர்கள் என, பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் உள்ளன.மேலும், பூங்கா பகுதியில், துாய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் 2021- - 22ல் கட்டப்பட்ட ஆண்கள் சிறுநீர் கழிப்பறையும் உரிய பராமரிப்பின்றி, சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.எனவே, சாலை ஓர ஏரிக்கரை பூங்காவை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ