உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மக்கள் காத்திருக்கும் கூடத்தில் மின்விசிறி அமைக்க கோரிக்கை

மக்கள் காத்திருக்கும் கூடத்தில் மின்விசிறி அமைக்க கோரிக்கை

மதுராந்தகம்,:மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்ட பொதுமக்கள் காத்திருக்கும் கூடத்தில் மின்விசிறி வசதி ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகம், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ளது.இங்கு, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள், தங்களின் கோரிக்கை மனு வழங்க வந்து செல்கின்றனர். அவர்களின், தேவைக்காக அலுவலக வளாகத்தில், இரும்பு ஷீட்டு கொண்ட காத்திருக்கும் கூடம் அமைக்கப்பட்டது.தற்போது, கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், காத்திருக்கும் கூடத்தில் அனல் அதிகமாக வீசுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, காத்திருப்பு கூடத்தில் மின்விசிறி வசதி ஏற்படுத்த, வட்டாட்சியர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை