சீசிங் ராஜா கூட்டாளி தாம்பரத்தில் கைது
தாம்பரம்:தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் விவேக்ராஜ், 29. இவர் மீது தாம்பரம், சிட்லப்பாக்கம், சேலையூர், பீர்க்கன்காரணை, ஓட்டேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில், 12க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.சரித்திர பதிவேடு குற்றவாளியான விவேக்ராஜ், ரவுடி 'சீசிங்' ராஜாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார்.'சீசிங்' ராஜாவைப் போல் தன்னையும் போலீசார் என்கவுன்டர் செய்து விடுவார்களோ என பயந்த விவேக்ராஜ், சில மாதங்களுக்கு முன், பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக, தாம்பரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.பின் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், சேலையூர் பகுதியில், அதிகாலையில் சென்ற நபரை மடக்கி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.இந்த வழக்கில், சேலையூர் போலீசார் விவேக்ராஜை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.