உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை புறநகர் பஸ் நிலையம் கட்டுமான பணி துவக்கம்

செங்கை புறநகர் பஸ் நிலையம் கட்டுமான பணி துவக்கம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், அரசு போக்கு வரத்து கழக பணிமனை ஆகியவை அருகருகே அமைந்துள்ளன.புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராட்டினங்கிணறு வரை, தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதைத் தவிர்க்க, புதிய புறநகர் பேருந்து நிலையம், அரசு போக்குவரத்து கழக பணிமனை ஆகியவற்றை, நகருக்கு வெளியே அமைக்க வேண்டும் என. அரசிடம் வலியுறுத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சி, மலையடிவேண்பாக்கம் கிராமத்தில், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம் மற்றும் பணிமனை அமைக்க, அரசு மருத்துவக் கல்லுாரிக்கு சொந்தமான, 14 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த நிலம், சென்னை பெருகர வளர்ச்சிக் குழுமத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது கட்டுமான பணிகளுக்காக, 97 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டு, கடந்த ஆண்டு, நவ., 15ம் தேதி, காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.தற்போது, புறநகர் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் துவங்கி, தீவிரமாக நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


 பட்டம்

16 hour(s) ago  




அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை