உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்க எதிர்பார்ப்பு

நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்க எதிர்பார்ப்பு

திருப்போரூர், : அடையாறு - கேளம்பாக்கத்திற்கு தடம் எண்: 19பி மற்றும் அடையாறு - வெளிச்சை தடம் எண்: 19கே என்ற அரசு பேருந்துகள், புதுப்பாக்கம் வழியாக ஓ.எம்.ஆர்., சாலை, தாழம்பூர் சிறுசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டன.இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக இப்பேருந்து சேவை அறிவிப்பு ஏதுமின்றி, திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்தோர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் என, அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசனிடம், புதுப்பாக்கம் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.எனவே, நிறுத்தம் செய்யப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை