மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதி இருமுடி விழா, கடந்த டிச., 1ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் வரை நடந்தது.இதில், தமிழகம் மட்டும் இன்றி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 36 லட்சத்திற்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தர்கள் பங்கேற்று, இருமுடி அணிந்து வந்து, ஆதிபராசக்தி அம்மனை வங்கி, சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்தனர்.தொடர்ந்து, தைப்பூச ஜோதி விழாவையொட்டி, மங்கள இசையுடன் ஆதிபராசக்தி அம்மனுக்கு, நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது.அதன்பின், பங்காரு அடிகளார் இல்லத்தில் இருந்து, குரு ஜோதி ஊர்வலம் புறப்பட்டு, ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரி விளையாட்டு மைதனத்தில் அமைக்கப்பட்டிருந்த தைப்பூச ஜோதி மேடைக்கு வந்தடைந்தது.தைப்பூச ஜோதியை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம், தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குனர் அருண்ராஜ், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் ஏற்றினர்.ட்ரம்ஸ் சிவமணி, கீபோர்டு கலைஞர் ஸ்டிபன் தேவஸ்ஸி ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.செவ்வாடை பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் ஈரோடு மாவட்ட மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், சக்தி பீடங்கள் மற்றும் மாவட்ட நிர்வாக்குழுவினர் செய்திருந்தனர்.செங்கல்பட்டு எஸ்.பி., சாய் பிரணீத் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.