மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
8 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
8 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
8 hour(s) ago
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவில் சங்குதீர்த்தகுள தைப்பூச தெப்போற்சவம், வரும் 25ம் தேதி நடைபெறுகிறது.ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. நான்கு வேதங்கள் மலைக்குன்றுகளாக உருவெடுத்து, அதன் உச்சியில், வேதகிரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக கோவில் கொண்டுள்ளார்.இக்கோவிலின் பிரதான சங்குதீர்த்தகுளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, அதிசய சங்கு தோன்றும். மேலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குருபகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியடையும் நாளில், குளத்தில் லட்ச தீப பெருவிழா நடைபெறும்.இத்தகைய குளத்தில், ஆண்டுதோறும் தைப்பூச நாளில் தெப்போற்சவம் நடைபெறும். தைப்பூச நாளான, வரும் 25ம் தேதி மாலை, வேதகிரீஸ்வரர் இக்குளத்தில் தெப்போற்சவம் காண்கிறார்.மறுநாள் இரவு, திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை பக்தவச்சலேஸ்வரர் கோவில் ரிஷப தீர்த்த குளத்திலும், தெப்போற்சவம் காண்கிறார்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago