உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருக்கழுக்குன்றம் சார் -- பதிவாளர் அலுவலகம் கட்ட ரூ.1.35 கோடி

திருக்கழுக்குன்றம் சார் -- பதிவாளர் அலுவலகம் கட்ட ரூ.1.35 கோடி

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதி, நிலம், வீட்டுமனை, திருமணம் உள்ளிட்ட பதிவுகளுக்காக, திருக்கழுக்குன்றத்தில் சார் - பதிவாளர் அலுவலகம் இயங்குகிறது. இங்குள்ள கம்மாளர் தெருவில், நுாற்றாண்டு பழமையான கட்டடத்தில், அந்த அலுவலகம் இயங்கி வந்தது.திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் பத்திரம் உள்ளிட்ட பதிவுகள் அதிகரிக்கும் நிலையில், குறுகிய, பழமையான கட்டடத்தில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டது. பிற அடிப்படை வசதிகளும் இல்லை.எனவே, புதிய அலுவலக கட்டடம் கட்ட பத்திர பதிவுத்துறை முடிவெடுத்து, அதே தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு, கடந்த ஆண்டு செப்.,ல் அலுவலகம் மாற்றப்பட்டது.தற்போது, 1.35 கோடி ரூபாய் மதிப்பில், சார் -- பதிவாளர் அலுவலகம் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ