உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  வேதகிரீஸ்வரர் கோவில் ரோப் கார் திட்டம் இழுபறி: மலைக்குன்றில் வாகன பாதை அமைக்க எதிர்பார்ப்பு

 வேதகிரீஸ்வரர் கோவில் ரோப் கார் திட்டம் இழுபறி: மலைக்குன்றில் வாகன பாதை அமைக்க எதிர்பார்ப்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு அறிவிக்கப்பட்ட 'ரோப் கார்' திட்டம் நிறைவேற்றப்படாமல் இழுபறியாக உள்ள நிலையில், மலைக்குன்றில் வாகன பாதை அமைக்க வேண்டுமென, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், பிரசித்தி பெற்றது. பவுர்ணமியன்று பக்தர்கள் கோவிலைச் சுற்றி கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்கின்றனர். கிரிவலம் இக்கோவில் சென்னைக்கு அருகிலுள்ள நிலையில், திருவண்ணாமலை கிரிவலம் செல்ல இயலாதவர்கள், இங்கு கிரிவலம் செல்கின்றனர். கோவில், 300 அடி உயர குன்றில் உள்ளதால், அடிவாரத்திலிருந்து 560 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். முதியோர், பெண்கள், சிறுவர், படியில் ஏறிச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். கோவில் ஊழியர்கள், கோவிலுக்கு செல்வதும் திரும்புவதும் தாமதமாகிறது. அப்பகுதியை கண்காணிப்பதும் சிக்கலாக உள்ளது. கோவிலை பக்தர்கள் எளிதாக அடைய, மலைக்குன்று பகுதியில் வாகன பாதை அல்லது 'ரோப் கார்' வசதி ஏற்படுத்த வேண்டுமென, பக்தர்கள் வலியுறுத்தினர். கோவில் உச்சிப்பகுதி குறுகலானது என்பதால், 'ரோப் கார்' இயக்க, அறநிலையத்துறை நிர்வாகம் முதலில் ஆர்வமின்றி, வாகனங்கள் செல்லும் பாதை அமைக்கவே பரிசீலித்தது. தற்போதைய ஆட்சியில், ரோப் கார் இயக்குவதாக, 2022 சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. பரிசோதனை தமிழக அரசின், 'இட்காட்' நிறுவனம் ஆய்வு செய்து, இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என, அரசிடம் பரிந்துரைத்தது. மலைக்குன்றின் மேற்கு பகுதியில், செங்கல்பட்டு சாலை பகுதியிலிருந்து, கோவிலுக்கு 'ரோப் கார்' இயக்கவும், தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்கவும், மண் பரிசோதனையும் நடத்தப்பட்டது. ஒப்பந்தம் திட்டத்தை செயல்படுத்த, 15 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, திட்ட மதிப்பீடு கடந்தாண்டு 19.50 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 400 பேர் செல்வதற்கேற்ப ரோப் கார் வடிவமைத்து, ஐந்து ஆண்டுகள் இயக்கி பராமரிக்க, தனியார் நிறுவனத்தை ஈடுபடுத்த, அத்துறையால் ஒப்பந்தமும் கோரப்பட்டது. பாதை ஆனால், தற்போது வரை திட்டம் துவக்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தையே கைவிட்டு, மலைக்குன்றில் வாகனங்கள் செல்வதற்கான பாதை அமைக்குமாறு, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். திட்ட மதிப்பீடு உயர்வு கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: 'ரோப் கார்' திட்டத்தின் தற்போதைய மதிப்பீடு 40 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதை செயல்படுத்தவோ அல்லது வாகன பாதை அமைப்பது குறித்தோ, துறை உயரதிகாரிகளே முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். கழுகுகள் வருவதில்லை பக்தர்கள் கூறியதாவது: வேதகிரீ ஸ்வரரை தரிசிக்க முன்பு வந்த கழுகுகள், 20 ஆண்டுகளாக வருவதில்லை. கிரிவல ம், சித்திரை விழா போன்ற உத்சவங்களின் போது தான், பக்தர்கள் கோவிலுக்கு செல்கின்றனர். தினமும் 50 முதல் 100 பேரும், ஆண்டிற்கு 2 லட்சம் பேர் மட்டுமே வருவதாக, கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது. ரோப் கார் திட்டத்தை அறிவித்த போது மகிழ்ந்தோம். அதனால் கோவில் மேலும் வளர்ச்சியடைந்து, இப்பகுதி பொருளா தாரம் போன்ற வகையில் முன்னேறும் என எதிர்பார்த்தோம். ஆனால் , திட்டத்திற்கு அதிக முதலீடு செய்து பக்தர்களும், வருவாயும் குறைவாக இருந்தால், திட்டத்தை கைவி டும் நிலையே ஏற்படும். எனவே, மலை மேல் வாகன ங்கள் செல்ல, பாதை அமைக்க வேண் டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை