உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மகளிர் காவல் நிலைய புதிய இன்ஸ்., பதவியேற்பு

மகளிர் காவல் நிலைய புதிய இன்ஸ்., பதவியேற்பு

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது.இந்த காவல் நிலையத்தில் இதற்கு முன் விஜயலட்சுமி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் மீது புகார்கள் குவிந்த நிலையில், கடந்த மாதம் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.இந்நிலையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, புதிய இன்ஸ்பெக்டராக மகிந்தா என்பவர் பதவியேற்றுக் கொண்டார்.இவர், இதற்கு முன் சோமங்கலம் காவல் நிலையத்தில் குற்றவியல் இன்ஸ்பெக்டராக பதவி புரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்