மேலும் செய்திகள்
37 துணை துாதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
1 hour(s) ago
ஓய்வூதியம்கோரி உண்ணாவிதரம்
1 hour(s) ago
சென்னை:ராயபுரம், என்.ஆர்.டி., மேம்பாலம் அருகே, கூடுதல் பறக்கும் படை அதிகாரி அருண் கென்னடி தலைமையில், நேற்று வாகன சோதனை நடந்தது. ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆணவங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 12 ஐ - போன்கள் சிக்கின.விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த அசான், 30 என்பதும், பர்மா பஜாரில் உள்ள கடையில் விற்க ஐ - போன்களை எடுத்துச் செல்வதும் தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், அவை பறிமுதல் செய்யப்பட்டன.கொளத்துார் ஜவஹர் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த வாகன சோதனையின்போது, நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த பரத், 36, என்பவரிடம் இருந்து 68,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கோயம்பேடு, நெற்குன்றத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரிடம் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் செய்ததில், சந்தோஷிடம் இருந்து 65,500 ரூபாயை பறிமுதல் செய்து, கிண்டியில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago